சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் பிரபல குணச்சித்திர நடிகராக விளங்கி வந்த ராம்கி (எ) ராமகிருஷ்ணன் காலமானார். இவர், சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல தொடர்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராம்கி. இவர் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது சினிமாவிலும் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ராம்கி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை.10) உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.