பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட எபிசோடுகளை இந்த தொடர் கடந்துள்ளது.
இதில் நாயகியாக நடித்துவரும் ஷபானாவும், 'பாக்கியலட்சுமி’ தொடர் ஆர்யனும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகப் பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் எதுவும் கூறாமல் இருந்தனர்.
இந்நிலையில் முதல்முறையாக நடிகை ஷபானா, ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதற்கு கமெண்ட் செய்த ஆர்யன், 'நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்' என பதிவிட்டிருந்தார். இதன்மூலம் இவர்கள் இருவரும் தங்களது காதலை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யன் இன்ஸ்டாகிராமில் பெண் கை மேல், தன் கை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். இரண்டு கைகளிலும் ஒரேமாதிரியான தங்க மோதிரம் இருந்ததால், அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என பேசப்பட்டது.