சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ஷபானா. இவரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் இன்று (நவ.11) திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் வேலைக்காக சென்னைக்கு வந்தேன். முடிந்ததும் கிளம்பிவிடலாம் என்றிருந்தேன். ஆனால் சென்னையில் செட்டிலாகலாம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், கடவுளின் திட்டப்படி நான் சென்னையிலேயே செட்டிலாகும் நிலைமை ஏற்பட்டது. என் காதலை தெரிவித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் எங்களுக்கு எப்போ கல்யாணம் என கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கான நேரம் வந்துவிட்டது. இன்றைக்கு எங்களுக்குத் திருமணம். உங்க அனைவரின் வாழ்த்தும் எனக்கு தேவை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் காதலரை கரம்பிடித்த செம்பருத்தி ஷபானா