செல்வராகவன் இயக்கம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பு, யுவனின் இசை என மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திரைப்படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.
இதில் ரெஜினா, நந்திதா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்னைகளால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கரோனா தொற்றால் நிறுத்திவைக்கப்பட்ட பல திரைப்படங்களும் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது.
இதையும் படிங்க...விஷாலின் சக்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!