தமிழில் ‘கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்ப்பறவை’, ’தர்மதுரை’, ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. பசுமை மாறாத கிராமத்து காவியங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கோணத்தில் சித்தரிக்கும் கைவண்ணம் கொண்டவர் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், மனைவி, மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், சீனு ராமசாமியின் பேஸ்புக் பக்கத்தில் ‘Got Married' என்ற போஸ்ட் வெளியிடப்பட்டது. இதைக்கண்ட ரசிகர்கள் இவருக்குதான் ஏற்கெனவே திருமணமாகிவிட்டதே என்று குழம்பினர்.
-
இது தவறான தகவல்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHX
">இது தவறான தகவல்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHXஇது தவறான தகவல்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHX
தற்போது இதற்கு விளக்கமளித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது தவறான தகவல் எனக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை ரியாவுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!