ETV Bharat / sitara

மீண்டும் வருகிறது 90'ஸ் கிட்ஸ்களின் ஸ்கூபி டூ: வைரலாகும் ட்ரெய்லர்!

'ஸ்கூப்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுவருகிறது.

author img

By

Published : Mar 6, 2020, 2:50 PM IST

மீண்டும் வருகிறது 90'ஸ் கிட்ஸ்களின் ஸ்கூபி டூ

'90ஸ்’ கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான கார்ட்டூன் நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் ஒன்று 'ஸ்கூபி டூ'. நம்மில் பலரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கண்டிப்பாக வளர்ந்து இருப்போம். இதையடுத்து 'ஸ்கூபி டூ’ அனிமேஷன் படமாக 2002ஆம் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 16 ஆண்டுகள் கழித்து 'ஸ்கூபி டூ' படம் தயாராகியுள்ளது. 'ஸ்கூப்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஷஃகி, ஸ்கூப் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மேலும் முந்தைய ட்ரெய்லரைவிட இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும்வகையில் அமைத்துள்ளதாக கார்ட்டூன் பட ரசிகர்கள் கூறியுள்ளனர். இப்படத்தை குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பதால், கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 'ஸ்கோப்' திரைப்படம் மீண்டும் 90'ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை நம் கண் முன் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லிப் கிஸ் புகைப்படம்: ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆலியா பட் - ரன்பீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.