துபாய்: ஐசிசி சார்பில் மகளிருக்கான 9வது 'டி-20' உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
106 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்: அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் நிதா தர் 28 ரன்கள், முனீபா அலி 17 ரன்கள், சையதா அரூப் ஷா 14 ரன், கேப்டன் பாத்திமா சனா 13 ரன்களை தவிர மற்ற யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
India off to a great start, restricting Pakistan to 105!#INDvPAK #T20WorldCup #WhateverItTakes pic.twitter.com/37SJu42q9S
— ICC (@ICC) October 6, 2024
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணியால் 105 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதேபோல் ரேணுகா, ஆஷா சோபனா மற்றும் தீப்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: இதனையடுத்து 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.
ஓப்பனிங் பேட்ஸ்மேனாககள மிறங்கிய ஸ்மிருதி மந்தனா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு பேட்ஸ்மேனான ஷபாலி வர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இருவரை இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதையும் படிங்க: வீரர்களுக்கு 4 மாதம் சம்பளம் பாக்கி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
இதில், நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷபாலி வர்மா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜெமிமா 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் பாத்திமா சனா வீசிய பந்தில் முனீபாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ், டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
India bring their Women's #T20WorldCup 2024 campaign back on track with a win over Pakistan 👏#WhateverItTakes #INDvPAK
— ICC (@ICC) October 6, 2024
📝: https://t.co/haYMwbKe4X pic.twitter.com/Y4608fYHjZ
இறுதியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 29 ரன் , தீப்தி சர்மா 7 ரன், சஞ்சனா 4 ரன்கள் எடுத்து அணியிந் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் 18.5 ஓவரில் இந்திய அணி 108-4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவிய இந்தியாவுக்கு, இந்த வெற்றி ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய மகளிர் அணி வரும் 9ம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்