ETV Bharat / sitara

பிளாக் விடோவை மிஞ்ச வருகிறார் ’எலனா’ - ஹாலிவுட் செய்திகள்

’பிளாக் விடோ’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்து வரும் சக நடிகை ஃப்ளோரன்ஸ் பக், அவரது கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து, மேற்கொண்டு பிளாக் விடோ திரைப்பட சீரிஸை நகர்த்திச் செல்வார் என ஸ்கார்லெட் ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.

பிளாக் விடோ
பிளாக் விடோ
author img

By

Published : Sep 20, 2020, 8:14 PM IST

அவெஞ்சராக அவதரிக்கும் ரஷ்ய சூப்பர் - ஸ்பை நடாஷாவாக ஹாலிவுட்டைக் கலக்கிய பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன், விரைவில் வெளிவரவிருக்கும் பிளாக் விடோ திரைப்படத்துடன் இக்கதாபாத்திரத்திலிருந்து விடைபெற உள்ளார்.

கடந்த 10 வருடங்களில் மொத்தம் ஏழு படங்களில் நடாஷா ரோமனாஃப் எனப்படும் பிளாக் விடோவாக ஜோஹன்சன் நடித்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரம் உயிரிழந்த நிலையில், தற்போது உருவாகி வரும் பிளாக் விடோ திரைப்படம், நடாஷா ரோமானாஃபின் இளமைக் காலத்தை விவரிக்கும் வகையில் உருவாகி வருகிறது. மேலும், நடாஷா எவ்வாறு ப்ளாக் விடோவாக அவதரித்தார் என்பதற்கான விடைகளும் இந்த ’பிரீக்வல்’ பாகத்தில் விளக்கப்படும்.

இப்படத்தில் ஜோஹன்சனுடன், ’லிட்டில் வுமன்’, ’மிட்சோமர்’ திரைப்படங்களில் நடித்த நடிகை ஃப்ளோரன்ஸ் பக், நடாஷாவின் சகோதரி எலனாவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து படக்குழுவினர் அளித்த பேட்டியில் பேசிய ஸ்கார்லெட் ஜோஹன்சன், எலனா கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது என்றும், தன் சொந்தக் காலில் நிற்கக் கூடிய, வலிமையான கதாபாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நடாஷா கதாபாத்திரத்திற்கும், எலனா பாத்திரத்திற்கும் பெரும் தலைமுறை வேறுபாடு இருக்கும். என்னைவிட, பக் மன வலிமை மிக்கவர். மிகவும் தைரியமான, எதற்கும் தயங்காத, உறுதியான அவர், ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை கண்ணெதிரே மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிளாக் விடோ திரைப்படம் குறித்து பேசிய பக், ”பிளாக் விடோவாக எலனா மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், மார்வெல் பட சீரிஸில் இணைந்துள்ளதை எண்ணி நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டேவிட் ஹார்பர், ரேச்சல் வெய்ஸ், ஓடி ஃபாக்பென்லே உள்ளிட்டோரும் நடித்துள்ள பிளாக் விடோ திரைப்பட்ம், வரும் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனாவை வென்று மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பிய ’தி ராக்’!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.