'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'ப்ளாக் விடோ'. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில்' ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ப்ளாக் விடோ படத்திலும் நடித்திருக்கிறார்.
கேப்டன் அமெரிக்காவின் சிவில் வாருக்கு பின்பும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாருக்கு முன்பும் நடப்பது போல் ப்ளாக் விடோவின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் நடாஷா ரோமனாஃப், ”என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாது. அவெஞ்சர்ஸ் என் முதல் குடும்பமும் அல்ல” என்கிறார். ப்ளாக் விடோவாக தோன்றும் ஸ்கார்லெட் ஜோகான்சன், மற்றொரு ப்ளாக் விடோவும் தனது சகோதரியுமான ஃபுளோரன்ஸ் பக்கை சந்திக்கிறார்.
-
Marvel Studios' #BlackWidow arrives in theaters November 6. pic.twitter.com/oyIGyAxm59
— Black Widow (@theblackwidow) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Marvel Studios' #BlackWidow arrives in theaters November 6. pic.twitter.com/oyIGyAxm59
— Black Widow (@theblackwidow) April 3, 2020Marvel Studios' #BlackWidow arrives in theaters November 6. pic.twitter.com/oyIGyAxm59
— Black Widow (@theblackwidow) April 3, 2020
இதையடுத்து இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து எதிரிகளோடு சண்டையிடும் விதமாக 2 நிமிடம் 23 விநாடிகள் ஓடும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து 'அவெஞ்சர்ஸ்' கேரக்டர்களுக்கும் பின்னணிக் கதை சொல்லப்பட்ட நிலையில், படத்தின் சூப்பர் வுமன் ஹீரோயினாகத் தோன்றும் ப்ளாக் விடோவின் பெயரில் தற்போது படம் தயாராகியுள்ளது.
இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவத்திருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக வெளியிடும் தேதி குறிப்பிடாமல் சமீபத்தில் ஒத்திவைத்திருந்தது. இதனையடுத்து இப்படம் இந்தாண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவவித்துள்ளது.
இதையும் படிங்க: ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய லேடி சூப்பர் ஸ்டார்!