ETV Bharat / sitara

காப்பான் படத்துக்கு குட்பை: டெடிக்கு ரெடியான சாயிஷா!

author img

By

Published : May 26, 2019, 8:33 PM IST

காதல் கணவர் ஆர்யா உடன் இணைந்து நடிக்கும் ‘டெடி’ படத்துக்கு நடிகை சாயிஷா தயாராகியுள்ளார்.

arya saye

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘காப்பான்’. இதில் ஆர்யா, சாயிஷா, மோகன் லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இதன் டிரெய்லர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள சாயிஷாவுக்கு ஆர்யா மீது காதல் ஏற்பட்டு திருமணம் முடிந்தது. இதனால் சாயிஷா படத்தில் நடிக்க வேண்டிய சில போர்ஷன்கள் மிஸ்ஸாகி உள்ளது. தற்போது சாயிஷா தனது போர்ஷன்களை முடித்து, ‘காப்பான்’ படத்துக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர் ‘டெடி’ படத்தில் நடிக்கவுள்ளார்.

arya saye
ஆர்யா - சாயிஷா

’மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் படம் ‘டெடி’. இதில் புது தம்பதியரான ஆர்யா - சாயிஷா இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இந்த ஜோடியின் திருமண நிகழ்ச்சிகளின் போதே தொடங்கிவிட்டது. ஒரு காதல் ஜோடியின் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டு இதன் கதைக்களம் அமைந்துள்ளது என கூறப்படுகிறது. அதனால்தான் ஆர்யா - சாயிஷாவின் திருமண சடங்குகளை படமாக்கியிருக்கிறார்களாம்! இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.