போயபடி சீனு இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் புதியப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு முன்பு இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து படக்குழு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதுவரை படத்தில் நடிப்பதற்காக நயாகியை படக்குழுவினர் முடிவு செய்யமால் இருந்தனர். இதற்காக பல்வேறு முன்னணி நாயகிகளுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்திவந்தனர்.
- — Sayyeshaa (@sayyeshaa) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Sayyeshaa (@sayyeshaa) November 10, 2020
">— Sayyeshaa (@sayyeshaa) November 10, 2020
இறுதியாக நடிகை சாயிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.
போயபடி சீனு - பாலகிருஷ்ணா கூட்டணி ஏற்கனவே 'சிம்ஹா', 'லெஜண்ட்' என்னும் இரு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இது இவர்களின் மூன்றாவது படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.