ஒயிட் லேம்ப் புரொடக்ஷன் சார்பில் ஆண்டனி சாமி, எஸ்பி ராமநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சாயம்'.
இந்தப் படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா - பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.
படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் புகுத்தப்படும் சாதி உணர்வு, அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எனும் கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
தென்மாவட்ட சாதி சங்கத் தலைவர்கள் சிலரின் புகைப்படங்கள் இடம்பெற்றதாக பரவிய தகவலையடுத்து, திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, இயக்குநருக்கு மிரட்டல்கள் வந்ததாக கூறப்பட்டது. பின்னர் இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 90 திரையரங்குகளில் வெளியானது.
தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் படக்காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதையடுத்து, மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இதனால் பல திரையரங்கங்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ரிலீஸன்று திரையிடாத பல தென் மாவட்டத் திரையரங்கங்களும், 'சாயம்' திரைப்படத்தை வெளியிட்டு வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ - வெளியான 24 மணிநேரத்தில் 8.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை