ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்.
முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் - சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
Great time with our #தமிழ்ப்புலவர் @harbhajan_singh bro in #FriendShip Shooting spot 😍😍😍 @Siva_Kartikeyan @ChennaiIPL pic.twitter.com/Uwo1JHc1C9
— Sathish (@actorsathish) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Great time with our #தமிழ்ப்புலவர் @harbhajan_singh bro in #FriendShip Shooting spot 😍😍😍 @Siva_Kartikeyan @ChennaiIPL pic.twitter.com/Uwo1JHc1C9
— Sathish (@actorsathish) March 8, 2020Great time with our #தமிழ்ப்புலவர் @harbhajan_singh bro in #FriendShip Shooting spot 😍😍😍 @Siva_Kartikeyan @ChennaiIPL pic.twitter.com/Uwo1JHc1C9
— Sathish (@actorsathish) March 8, 2020
ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும், இந்த படத்தை பி. ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, ஆக்ஷன் கிங் ஆர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சிவகார்ததிகேயனும் சதீஷூம் நடித்த ’எதிர்நீச்சல்’ படத்தில் இருந்து ஒரு காட்சியை ஹர்பஜன் சிங்கிடம் சதீஷ் காட்டியிருக்கிறார். சிவகார்த்திகேயனிடம் சதிஷ் கோபமுடன் அறைஞ்சா ஹர்பஜன் சிங் மாதிரி இருப்பேன் என கூறும் அந்த வீடியோவை ஹர்பஜன் சிங்கிடம் சதீஷ் காண்பிக்கிறார். இதனைப் பார்த்த ஹர்பஜன் சிங் மிகவும் மகிழ்ச்சியுடன் சதீஷை கட்டிப்பிடிக்கிறார்.