ETV Bharat / sitara

’தல’ அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து... ‘வேம்புலி’ ஜான் கோக்கனின் உருக்கமான பதிவு! - லேட்டஸ்ட் சினிமா

நடிகர் அஜித்தை தனது ஆசிரியர் எனக் குறிப்பிட்டு நடிகர் ஜான் கோக்கன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்தது வருகிறது.

அஜித் - ஜான் கோக்கன்
அஜித் - ஜான் கோக்கன்
author img

By

Published : Sep 5, 2021, 6:37 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித்தின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் வந்த அனைத்துக் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகின்றன.

’வேம்புலி’ ஜான் கோக்கன்

படத்தின் ஹீரோ ஆர்யாவின் கபிலன் கதாபாத்திரம், பசுபதியின் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் ஆகியவற்றைத் தாண்டி, டாடி, டேன்சிங் ரோஸ், வேம்புலி என பிற கதாபாத்திரங்களும், அக்கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

‘வேம்புலி’ ஜான் கோக்கன்
‘வேம்புலி’ ஜான் கோக்கன்

அந்த வகையில் இப்படத்தில் ஆர்யாவுக்கு எதிராக ஆஜானுபாகுவான பாக்சராகத் தோன்றி படத்தின் இறுதிவரை இடம்பெற்ற வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜான் கோக்கனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

‘வேம்புலி’ ஜான் கோக்கன்
‘வேம்புலி’ ஜான் கோக்கன்

ஜான் கோக்கனின் நலன் விரும்பி ’தல’ அஜித்

மேலும் இதற்கு முன் அவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்த வீரம், ஒஸ்தி, கேஜிஎஃப், பாகுபலி படங்களின் காட்சிகளையும் அவரது ரசிகர்கள் தேடி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக வீரம் படத்தில் நடித்தது தொடங்கி ஜான் கோக்கனுக்கு நடிகர் அஜித் திரையுலகில் வெற்றிகரமாக பயணிக்க பல ஆலோசனைகளையும் வழங்கி, நல்லதொரு நலன் விரும்பியாக வலம் வருகிறார்.

அஜித்
அஜித்

அதேபோல், ஜான் கோக்கனும் தனக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த ’வேம்புலி’ கதாபத்திரத்தை நடிகர் அஜத்துக்கு அர்ப்பணிப்பதாக முன்னதாகப் பதிவிட்டிருந்தார்.

தல அஜித் என் வாத்தியாரே....

இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித்தை தனது ஆசிரியர் எனக் குறிப்பிட்டு நடிகர் ஜான் கோக்கன் வாழ்த்தியுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ததுள்ளது.

தனது வாழ்த்துப் பதிவில் ”குரு பிரம்மா, குரு விஷ்ணு எனும் குருபகவானுக்கு உகந்த மந்திரத்தைக் குறிப்பிட்டு, தல அஜித் என் வாத்தியாரே... என் வாத்தியார் எனக்கு கடின உழைப்பு, பொறுமை, அடக்கம், அன்பு, விடா முயற்சி, தன்னைத் தானே நம்புதல், சரியான நேரம் ஆகியவை குறித்து கற்றுக்கொடுத்துள்ளார்.

‘வேம்புலி’ ஜான் கோக்கனின் உருக்கமான பதிவு

என்னை சரியான வழியில் வழிநடத்துவதற்கு நன்றி அஜித் சார். என்னை என் இன்றைய நிலைக்கு கொண்டு வந்ததற்கும், உத்வேகப்படுத்துவதற்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டவனான இருப்பேன். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜான் கோக்கனின் இந்தப் பதிவு நெட்டிசன்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: விஜய்க்காக தனுஷ் மாற்றிக்கொண்ட விஷயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.