ETV Bharat / sitara

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீடு! - சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று(மார்ச்.4) அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ’தி லெஜண்ட்’  திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீடு

author img

By

Published : Mar 4, 2022, 6:54 PM IST

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சரவணன் அருளுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் நேற்று லீக்கானது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அதை யாரும் பரப்பாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இதன் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று திட்டமிட்டபடி வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க:விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா - யுஏஇ அரசு கௌரவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.