ETV Bharat / sitara

43 ஆண்டுகள் நிறைவு- ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

திரையில் நுழைந்து 43 ஆண்டுகளுக்கு நிறைவு செய்துள்ள ராதிகாவிற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராதிகா
ராதிகா
author img

By

Published : Aug 11, 2021, 10:29 AM IST

'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. வெள்ளித்திரை, சின்னதிரையில் இவர் அறிமுகமாகி நேற்றுடன் (ஆக.10) 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "என் அன்பு மனைவி மற்றும் சிறந்த நண்பருக்கான பதிவு இது. திரைத்துறையில் 43 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்கள் ஒரு சிறந்த நடிகருக்கான அடையாளத்தை மட்டும் உருவாக்கவில்லை, ஒரு பாவமும் செய்யாத தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்திருக்கிறீர்கள்.

ட்விட்
ட்விட்

உங்கள் நடிப்பின் மூலம் நீங்கள் இன்னும் மறக்க முடியாத பாத்திரங்கள், வெற்றிகள் மற்றும் நிறைவேற்றங்களை நோக்கிச் செல்வதை நான் காணப்போகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், ராதிகா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராதிகா அப்பதிவில், "எப்போதும் என் தூணாக இருந்து என்னை ஒரு நபராக வளர செய்ததற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 43 years of Radhika: AV33 படக்குழு கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.