சென்னை: சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது.
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏ1 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பரவலாக பேசப்பட்டது. தற்போது அதே சந்தானம் - ஜான்சன்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு பாரிஸ் ஜெயராஜ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார்.
கானா பாடகர் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதே படத்தின் கதை. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோதி மற்றும் சஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
பாலாவின் நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் காவாக்குள்ள கல்லுடி என்ற முதல் பாடல் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான புளி மாங்கா புளிப் என்ற பாடல் நாளை காலை வெளியாகிறது.
சந்தானத்தின் ’பாரிஸ் ஜெயராஜ்’ - 2ஆவது பாடல் நாளை! - பாரிஸ் ஜெயராஜ்
காவாக்குள்ள கல்லுடி என்ற முதல் பாடல் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான புளி மாங்கா புளிப் என்ற பாடல் நாளை காலை வெளியாகிறது.
![சந்தானத்தின் ’பாரிஸ் ஜெயராஜ்’ - 2ஆவது பாடல் நாளை! santhanams paris jeyaraj movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10314675-449-10314675-1611151659942.jpg?imwidth=3840)