ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'ஏ1' திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பரவலாக பேசப்பட்டது. தற்போது அதே சந்தானம் - ஜான்சன்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி பாரீஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்தது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார்.
கானா பாடகர் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதே படத்தின் கதை. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோதி, சஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பாலாவின் 'நான் கடவுள்', 'அவன் இவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் காவாக்குள்ள கல்லுடி, புளி மாங்கா புளிப் என்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்தன. தற்போது இப்படம் காதலர்தினத்தை ஒட்டி பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.