காதலும் காதலுக்குள் ஏற்படும் பிரச்னையையும் வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ ஆல்பம் 'சண்டாளி அழகியே'. இந்த ஆல்பத்தை மலர் என்பவர் தயாரிக்க, அகில் என்பவர் நடித்துள்ளார்.
இந்த வீடியோ ஆல்பத்தை திரைப்பட நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் வெளியிட, பெப்சி சிவா பெற்றுக் கொண்டார். அப்போது, ஆல்பத்தில் நடித்திருந்த அகில், தயாரிப்பாளர் மலர், வசனகர்த்தா குமரேசன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜய் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆல்பத்தில் நடித்து நடனம் ஆடியுள்ள அகில், திரை உலகில் நுழைய தகுதியானவர்தான் என நட்டியும், பெப்சி சிவாவும் பாராட்டி வாழ்த்தினர்.