ETV Bharat / sitara

டிவியில் நேரடியாக வெளியாகும் சமுத்திரக்கனியின் 'வெள்ளை யானை'

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளை யானை' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

author img

By

Published : Jul 5, 2021, 1:14 PM IST

vellai yanai
vellai yanai

தனுஷை வைத்து 'திருடா திருடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இயக்குநர் சுப்ரமணியம் சிவா. இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பொறி', 'யோகி', 'சீடன்' ஆகியப் படங்களை இயக்கினார்.

இதனையடுத்து சுப்ரமணியம் சிவா சமுத்திரக்கனியை வைத்து 'வெள்ளை யானை' படத்தை இயக்கியுள்ளார். இதில், சமுத்திரக்கனியுடன் நடிகர் யோகி பாபு, நடிகைகள் ஆத்மியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயம், விவசாயிகள் குறித்தான 'வெள்ளை யானை' படத்தின் படப்பிடிப்புகள், இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், திரைக்கு வர தயாரானது.

ஆனால், கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு பலமுறை தள்ளிவைப்பட்டது.

இந்நிலையில், 'வெள்ளை யானை' திரைப்படத்தின் உரிமையை சன் டிவி கைப்பற்றியது. இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி இப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. முன்னதாக, 'ஏலே', 'மண்டேலா' ஆகிய படங்கள் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வெள்ளை யானை' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தனுஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.