ETV Bharat / international

'வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துக!': நியூயார்க்கில் வித்தியாசமான கவன ஈர்ப்பு! - Bangladesh Hindu Genocide - BANGLADESH HINDU GENOCIDE

வங்கதேசம் இந்துக்கள் இல்லாத நாடாக மாறினால், அது ஆப்கானிஸ்தான் 2.0 ஆக மாறும். மேலும், தீவிரவாதிகள் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுவார்கள். எனவே, இது அனைவருக்குமான பிரச்னை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச இந்துக்களை பாதுகாக்க கோரி நியூயார்க் வான் பரப்பில் பேனர் பிரச்சாரம்
வங்கதேச இந்துக்களை பாதுகாக்க கோரி நியூயார்க் வான் பரப்பில் பேனர் பிரச்சாரம் (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 6:51 PM IST

நியூயார்க்: வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் இந்துக்கள் இனப்படுகொலையை தடுக்க உலக அளவில் தீவிர வேண்டுகோள் விடுக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்து குழுவினர், நியூயார்க் வான் பரப்பில் ஒரு பெரிய பதாகையை பறக்கவிட்டனர்.

இந்த பதாகையானது ஹட்சன் ஆற்றின் மீது பறக்கவிடப்பட்டது. மேலும், மனித கண்ணியம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் உலகளாவிய அடையாளமான சுதந்திர தேவி சிலையையும் சுற்றி வந்தது. கடந்த 2022-ல் அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் 'எச்ஆர் 1430'-ல் ஆவணப்படுத்தப்பட்ட படி, 1971ம் ஆண்டு இனப்படுகொலையில் 2.8 மில்லியன் (28 லட்சம்) மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், குறைந்தது 2 லட்சம் பெண்கள், பெரும்பாலும் இந்துப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறது.

வங்கதேசத்தின் இந்து மக்கள் தொகை கடந்த 1971-ல் 20 சதவீதமாக இருந்த நிலையில், இனப் படுகொலைக்குப் பிறகு, தற்போது வெறும் 8.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. திட்டமிட்ட வன்முறை, வறுமை, கொலைகள், மைனர் பெண்களை கடத்துதல், 2 லட்சம் இந்துக்கள் கட்டாய வேலை நீக்கம் மற்றும் சொத்து பறிமுதல் என, அந்நாட்டில் வாழும் 13 முதல் 15 மில்லியன் இந்துக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து சுமார் 250 உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நியூயார்க்கில் கவன ஈர்ப்பு பதாகை பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வங்கதேச இந்து சமூகத்தைச் சேர்ந்த சிடாங்ஷு குஹா, இந்த அச்சுறுத்தல் குறித்து கூறுகையில், "வங்கதேசத்தில் இந்துக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். கவன ஈர்ப்பு பதாகை முயற்சி, உலக அரங்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வங்கதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஐ.நா நடவடிக்கை எடுக்கவும் உதவும்.

இதையும் படிங்க: ஈரான் Vs இஸ்ரேல் மோதல்! பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

வங்கதேசம் இந்துக்கள் இல்லாத நாடாக மாறினால், அது ஆப்கானிஸ்தான் 2.0 ஆக மாறும். மேலும் தீவிரவாதிகள் அண்டை நாடான இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் உட்பட உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுவார்கள். எனவே, இது அனைவருக்குமான பிரச்னை." என்றார்.

இதேபோல், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஸ்ரீ கீதா சங்கத்தின் நிறுவன உறுப்பினர் சுர்ஜித் சவுத்ரி கூறுகையில், "இந்து சமூகத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுத்து நிறுத்தவும், ஜனநாயக வழியல் அரசியல் வேறுபாடுகள் பிரச்னைக்கு தீர்வு காணவும் வங்கதேச அரசு முன்வர வேண்டும்" என்றார்.

வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகளை மனிதாபிமான கண்காணிப்புக் குழுக்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. வன்முறை அதிகரிப்பது முழு அளவிலான இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த அமைப்புகள் அஞ்சுகின்றன.

இச்சூழலில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்க்க, அமெரிக்காவில் உள்ள இந்து குழுக்கள், நியூயார்க்கில் பெரிய அளவிலான பதாகையை வான் பரப்பில் பறக்க விட்டனர். இதனை "StopHinduGenocide.org" என்ற வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். மேலும், இந்த தளத்தில் இந்துக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழியங்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று சூழல் மற்றும் உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்காத வரை வங்காளதேச இந்துக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தும் எதிர்காலம். உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்காதவரை வங்கதேசத்தில் இந்துக்களுக்கு அச்சுறுத்தலான எதிர்காலமே உள்ளது என்றும் இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.