Thalaikoothal Pooja: வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சமுத்திரக்கனியின் 'ரைட்டர்' படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாகும் முன்பே சிறப்பு திரையிடல் மூலம், சிறந்த திரைப்படம் என்ற பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் 'தலைக்கூத்தல்' திரைப்படமானது இன்று (டிசம்பர் 22) பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் சமுத்திரகனியுடன் கதிர் இணைந்து நடிக்கிறார்.
ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவர் தயாரித்த 'விக்ரம் வேதா'வில் கதிர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த நிலையில், இந்தப் படத்திலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தலைக்கூத்தல் என்ற வித்தியாசமான தலைப்பில் படத்தை எழுதி, இயக்குகிறவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
![தலைக்கூத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13982847_samuthirakaniii.jpeg)
இவர் ஏற்கனவே லென்ஸ், தி மஸ்கிட்டோ பிலாஸபி போன்ற படங்களை இயக்கி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றவர். இந்தமுறை தான் ஒய் நாட் ஸ்டுடியோ போன்ற பெரிய நிறுவனத்துக்காக படம் இயக்குகிறார். இந்நிலையில் 'தலைக்கூத்தல்' திரைப்படத்தில் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க: Blood Money Movie:'நெல்சனால்தான் எல்லாமே...'; மனம் திறந்த பிரியா பவானி சங்கர்!