சமுத்திரக்கனி இயக்கி நடித்த திரைப்படம் 'விநோதய சித்தம்'. இவருடன் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'விநோதய சித்தம்' திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளமான ஜீ5 இல் அக்டோபர் 13ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

'விநோதய சித்தம்' குறித்து சமுத்திரக்கனி கூறியதாவது, 'சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி'

தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.
படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்தனர். அனைவருக்கும் நன்றி' என்றார்.
இதையும் படிங்க: 'விநோதய சித்தம்’ அணைவரும் உணர்ந்து கொள்ளும் படம் - சமுத்திரகனி