ETV Bharat / sitara

பேரன்பான இயக்குநர்...கங்கனாவிற்கு நன்றி...வெல்வோம்: சமுத்திரகனியின் 'தலைவி' அப்டேட் - சமுத்திரகனியின் தலைவி

சென்னை: கங்கனா நடிப்பில் உருவாகிவரும் தலைவி படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

Samuthirakani
Samuthirakani
author img

By

Published : Dec 5, 2020, 7:44 PM IST

இயக்குநர் ஏ.எல். விஜய் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்னும் படத்தை இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடித்து வருகிறார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துவருகிறார். இவர்களுடன் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையைக் கூட்டினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுவத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.

  • "தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது...மிக்க மகிழ்ச்சி... பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் ...செல்வி .கங்கனா ரணாவத் ...திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்,உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்..! pic.twitter.com/wZjegLxvl0

    — P.samuthirakani (@thondankani) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் படப்பிடிப்பின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இன்று (டிச.5) ஜெயலலிதா இறந்து நான்காம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு கங்கனா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இன்று காலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், "தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது...மிக்க மகிழ்ச்சி... பேரன்பான இயக்குநர் ஏ.எல்.விஜய் ...செல்வி .கங்கனா ரணாவத் ...திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்,உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்..! என சமுத்திரகனி தனக்கான படப்பிடிப்பு நிறைவடைவந்து விட்டதாக ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.