தமிழ் சினிமாவில் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த சமீரா ரெட்டி, திடீரென திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமீரா ரெட்டி, நீச்சல் குளத்தில் எடுத்த பல புகைப்படங்கள் வைரலானது. பின் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தனது குழந்தையுடன் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான முல்லயநாகிரிக்கு சென்றுள்ளார்.
இந்த மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரத்தில் உள்ளது. 2 மாத குழந்தையுடன் சிகரத்தின் உச்சியில் நிற்கும் காட்சியை சமீரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மலை உச்சிக்கு செல்லும் முன்பாக பாதி வழியிலேயே மூச்சு திணறலால் நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் அவரை சிறந்த தாய், வலிமையான பெண்மணி என்று புகழ, இன்னொரு தரப்பினர் 2 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இப்படியொரு சாகசம் தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: 'குட்டி தேவதையாக பெண் குழந்தை' - சமீரா ரெட்டிக்கு குவியும் வாழ்த்து!