சென்னை: வெப்சீரிஸ் பக்கமாக நடிகை சமந்தாவும் தலைகாட்டவுள்ளார். 'தி ஃபேமிலி மேன்' என்ற தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இந்த ஆண்டு தமிழில் அவரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் வெளிவந்த மஞ்சிலி, ஓ பேபி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
தொடர்ந்து இருமொழிப் படங்களிலும் நடித்து வரும் சமந்தா, தற்போது வெப்சீரிஸ் தொடரில் அடியெடுத்து வைக்கிறார். இந்தியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அமேசான் ப்ரைம் ஆன்லைன் ஸ்டீரிமிங் பிளாட்பார்மில் ஒளிபரப்பாகிய, தி ஃபேமிலி மேன் என்ற தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடரை ராஜ் நிதிமோரு இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், இந்தத் தொடரின் இரண்டாவது சீசனில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளாராம். மேலும், காஞ்சனா சீரிஸ் உள்ளிட்ட ஏரளாமான தமிழ்ப் படங்களில் கலக்கிய நடிகை தேவதர்சினியும் இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: