தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பே திரைப்படம், சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது நேரத்தை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது கணவருடன் செலவிடும் பொன்னான நேரங்கள் குறித்து அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தான் பெட்ரூமில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவருடன் அவரது செல்ல நாய் ’ஹாஷ்’ உறங்குகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை கண்டிப்பாக நாக சைத்தன்யாதான் எடுத்திருப்பார் என்றும், மிகவும் அருமையான க்ளிக் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்