ETV Bharat / sitara

ரூ.200 கோடி ஜீவனாம்சம்: பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா - ரூ.200 கோடி ஜீவனாம்சம்

சமந்தா-நாக சைதன்யா ஜோடி பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

samantha
samantha
author img

By

Published : Oct 4, 2021, 2:58 PM IST

திரை நட்சத்திரங்கள் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பல படங்களில் நடித்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2010 முதல் ஏழு ஆண்டுகள் காதலித்து 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.

நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. அப்படிதான் இருவரின் நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சமந்தாவிடம் திருப்பதி கோயிலில் வைத்தே செய்தியாளர்கள், கேள்வி எழுப்பினர். அதற்கு சமந்தா தனது அதிருத்தியை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சமந்தா, தன்னையும் கணவர் நாக சைதன்யா குறித்தும் தவறான கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்தார். இதனைக்கொண்டு, இருவருக்கும் இடையே மனக் கசப்பு இல்லை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்.2ஆம் தேதி இருவரும் அதிகாரப்பூர்வமாக கணவன்-மனைவி உறவில் இருந்து பிரியப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தனது சமூவலைதளப் பக்கங்களில் சமந்தா அக்கினேனி பெயரை நீக்கி விட்டு வெறும் எஸ் (S) என்று மாற்றியுள்ளார்.முன்னதாக நாக சைதன்யா ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும், இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமந்தா - நாக சைதன்யா பிரிவு: விசயத்தை போட்டுடைத்த கங்கனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.