தமிழில் சக்கைபோடு போட்ட ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜானு’. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
‘ஜானு’ படத்தின் வெளியீட்டுக்குப் பின் பேட்டியளித்த சமந்தா, தனது இல்லற வாழ்க்கையையும் சினிமா தொழிலையும் சீராக மேனேஜ் செய்வது பற்றியும் ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை குறித்து சமந்தா, ”நான் நடிக்கும் கதாபாத்திரங்களை வீட்டு வாசலிலேயே விட்டுவிடுவேன். வீட்டில் முழு நேரத்தையும் நாக சைதன்யாவுடன் (கணவர்) செலவிடுவேன். இதை ச்செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றேவிடுவார்” என சிரித்தபடி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ” ‘ரங்கஸ்தலம்’ படத்தைத் தேர்வுசெய்தன் மூலம், படத்தைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் கைதேர்ந்த நடிகை என சில வலைதளங்களில் செய்திகளைக் காண முடிகிறது. உண்மையில் நான் ‘ரங்கஸ்தலம்’ கதையைக் கூட படிக்கவில்லை” என்றார்.
2018ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’. சாதியின் கோரமுகத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய இத்திரைப்படம், சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.