தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாகத் தெரிவித்தார்.
இதனால் சமந்தாவின் திரையுலகப் பயணம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அனைவரும் எண்ணினர். ஆனால் சமந்தாவின் திரையுலகப் பயணத்தில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்பதே உண்மை. சொல்லப்போனால் விவாகரத்து தொடர்பான அறிவிப்புக்குப் பிறகுதான் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்று கோவா பன்னாட்டுத் திரைப்பட விழா. இவ்விழாவில் நடிகை சமந்தா சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் முதல் தென் இந்திய நடிகை என்ற பெருமை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தி சமந்தா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் கோவா பன்னாட்டுத் திரைப்பட விழா கடந்த ஆண்டு மட்டும் கரோனா தொற்று காரணமாக ஜனவரி மாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படக்குழுவினருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் தங்க நாணயம் பரிசளித்த சூர்யா