ETV Bharat / sitara

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா...! - சமந்தா லேட்டஸ் செய்திகள்

நடிகரும் தனது கணவருமான நாக சைதன்யாவைப் பிரிந்து விடுவதாகப் பரவி வந்த வதந்திக்கு நடிகை சமந்தா, தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

samantha
samantha
author img

By

Published : Sep 21, 2021, 3:57 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர், சமந்தா. இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாது திருமணத்திற்குப் பின் சமந்தா தனது இயற்பெயரான சமந்தா ரூத் பிரபு என்ற பெயரை மாற்றி, நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியைச் சேர்த்து 'சமந்தா அக்கினேனி' எனப் பயன்படுத்தினார்.

இதனிடையே சமீபத்தில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்த சமந்தா அக்கினேனி பெயரை நீக்கிவிட்டு வெறும் S என்று மாற்றினார்.

உடனே நெட்டிசன்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிந்துவிடுவார்கள் எனவும் வதந்தி பரப்ப ஆரம்பித்தனர்.

சமீபத்தில் சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரிடம் 'நாக சைதன்யாவை பிரியப் போவதாகச் சொல்கின்றனர். அது உண்மை தானா' எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கோப சமந்தா

அதற்குச் சமந்தா, "நான் கோயிலுக்கு வந்திருக்கிறேன். உங்களுக்குப் புத்தி இருக்கா" எனக் கோபத்துடன் பதிலளித்தார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டரில், நடிகர் நாகஅர்ஜூனா தனது தந்தையும் பழம் பெரும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் நினைவு தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதை பார்த்து சமந்தா, 'இது ரொம்ப நல்ல இருக்கு. நகா அர்ஜூனா மாமா' எனப் பதிவிட்டார்.

இந்த கருத்தைப்பார்த்த நெட்டிசன்கள், நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரியமாட்டார்கள் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சூர்யாவைப் போல் விருதை தட்டிச் சென்ற சமந்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.