ஓடிடி தளமான அமேசன் பிரைமில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இணையத் தொடர் 'தி ஃபேமிலி மேன் 2'.
இந்தத் தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் - டி.கே ஆகியோர் இயக்கினர். மனோஜ் பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தத் தொடரில் இலங்கை தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். இந்தத் தொடரில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தவறான தகவல்கள் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறி தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தொடரை தடைசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'தி ஃபேமிலி மேன் 2' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் தொடர் திரைப்பட விழாக்களில் முக்கிய விழாவான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா 2020 - 21 ஆண்டிற்கான விருது விழாவில் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
![சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய சமந்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:02:24:1629459144_sama_2008newsroom_1629459102_431.jpg)
![Samantha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:02:25:1629459145_samma_2008newsroom_1629459102_705.jpg)
![சமந்தாவின் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:02:23:1629459143_sam_2008newsroom_1629459102_186.jpg)
இதையும் படிங்க :120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய்...?