ETV Bharat / sitara

'ஜல்லிக்கட்டு காளை ரெடி' - தமிழில் பேசிய சல்மான் கான்! - ஜல்லிகட்டு காளை

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் 'தபாங் 3' படத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Dabangg3
author img

By

Published : Sep 11, 2019, 1:52 PM IST

பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றிபெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தபாங் 2' அர்பாஸ் கான் இயக்கினார்.

தற்போது இப்படத்தின் 3ஆம் பாகமான 'தபாங் 3' படத்தை நடிகர் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிவருகிறார். ஷஜித் - வாஜித் பாடல்களுக்கு இசையமைக்க, சந்தீப் ஷிரோத்கர் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.

இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர். பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கே.ஜே.ஆர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கான் தமிழில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர், 'ஜல்லிக்கட்டு காளை ரெடி' என்று தமிழில் பேசியுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

Intro:Body:

Super special TAMIL video in @BeingSalmanKhan’s very own voice coming up at 11:12 am today! FIRE indeed!

https://twitter.com/kjr_studios/status/1171628431823577088

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.