பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். 53 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் டைகர் என அழைக்கப்படும் இவர், கடந்த சில தினங்களாக குழந்தைகளுடன் விளையாடும் குறும்பு வீடியோக்கள், உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சல்மான், தனது புதிய படங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து ரசிர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், 'தபாங் 3' படப்பிடிப்பின்போது சல்மான், பிரபு தேவாவிடம் 'ஊர்வசி ஊர்வசி' பாட்டிற்கு நடனம் கற்கும் வீடியோ இணையத்தை கலக்கியது. இந்நிலையில், தனது தாயார் சல்மாவுடன், சல்மான் கான் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அம்மாவின் கைகளை பிடித்து சியாவின் ‘சீப் த்ரில்ஸ்’ பாட்டிற்கு நடனம் ஆடும்பொழுது ஒருவர் வீடியோ எடுக்கிறார்.
மேலும், பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் சல்மான் கானின் குழந்தை தனத்தை ரசித்தபடியே அவரது தாயார் சல்மா ஈடுகொடுத்து நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை இதுவரை இரண்டு லட்சம் பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த பாலிவுட் பிரபலங்கள் கியாரா அத்வானி, வருண் தவான், இஷா குப்தா உள்ளிட்ட பலரும் மனதை லேசாக்கிவிட்டது. மனநிறைவை தந்த கானுக்கு வாழ்த்துகள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.