ETV Bharat / sitara

டிக் டாக் தடை இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் - சாக்ஷி அகர்வால் - Central government

சீனா செயலிகளுக்குத் தடைவிதித்த மத்திய அரசிற்கு நடிகை சாக்ஷி அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்
author img

By

Published : Jun 30, 2020, 6:50 PM IST

ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் எழுந்தது.

இதையடுத்து நேற்று டிக் டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு, இந்தியாவில் மத்திய அரசு தடைவிதித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து நடிகை சாக்ஷி அகர்வால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த முடிவு இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இது இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்ஷி, டிக் டாக் தளத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சீனத் தயாரிப்புகளை இனி உபயோகிக்கப் போவதில்லை' - டிக்டாக்கிலிருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.