சென்னை: 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால் விஷாலின் 'ஆக்ஷன்' படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்(Post production) பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் இப்படத்தில் டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்ஷன் படத்துக்காக டப்பிங் செய்ததுதான், டப்பிங்கில் எனது முதல் அனுபவம். என் குரலை கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. எனது வாழ்வில் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்தப் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். வில்லனாக கபீர் சிங் நடித்துள்ளார்.
யோகி பாபு, ராம்கி, பழ. கருப்பையா, சாயா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு தூட்லே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இதையடுத்து படத்தில் இடம்பெற்ற ஹீரோயின்களில் ஒருவருக்கு சாக்ஷி அகர்வால், டப்பிங் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
'ராஜா ராணி' படத்தில் சிறு வேடத்தில் தோன்றிய சாக்ஷி அகர்வால் பின்னர் யோகன், திருட்டு விசிடி, கககபோ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இதைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 'காலா' படத்திலும், அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்திலும் சிறிய கேரக்டரில் நடித்தார்.
தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடித்துவரும் 'ஆயிரம் ஜென்மங்கள்', ராய் லட்சுமி நடித்துவரும் 'சின்ட்ரெல்லா' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.