ஹைதராபாத்: இதயக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மூத்த நடிகை சாய்ரா பானு, ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை தேறி நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். நிதின் எஸ். கோகலே, சாய்ராவின் இடது வென்ட்ரிக்கிள் செயல்படுவதை நிறுத்திவிட்டது. இதனால் அவரது இதயம் மற்றும் நுரையீரல் பகுதியினுள் நீர் புகுந்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1961ஆம் ஆண்டு வெளியான 'ஜங்லீ' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், சாய்ரா பானு. 1960 - 70 காலகட்டங்களில் முக்கியமான நடிகையாகத் திகழ்ந்தார்.
நடிகர் திலீப் குமாரை மணந்துகொண்ட பின்பு, அவரை கவனிப்பதற்காக நடிப்பை விட்டுவிட்டார்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் குறிப்பிட்டு ட்வீட்: 39 பிரபலங்கள் மீது வழக்கு!