பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ 'எஸ்தல் என்டர்டெய்னர்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் 'அழகிய கண்ணே'.
இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R. விஜயகுமார் இயக்குகிறார்.
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
N.R. ரகுநந்தன் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், பிரபல பின்னணி பாடகி சைந்தவி, GV. பிரகாஷ் குமார் பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என இசைமைப்பாளர் N.R. ரகுநந்தன் தெரிவித்துள்ளார்.