பரம்பரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சைஃப் அலிகான். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'பண்டி அவுர் பாப்லி 2' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சைஃப் அலிகான், தனது சுயசரிதையை எழுதி வருகிறார்.
இதில் அவரது குடும்ப வாழ்க்கை, நடிப்பு ஆகிய பல விஷயங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிவிட்டன. அவற்றை நான் பதிவு செய்யாவிட்டால் காலப்போக்கில் இழக்க நேரிடும். இதைத் திரும்பிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.
இப்புத்தகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும். மற்றவர்களும் இந்த புத்தகத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன். ஹார்பர்காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா இந்த புத்தகத்தை வெளியிடுகிறது" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சைஃப் அலிகான் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.