இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்தைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் சாய் பல்லவியை காணவில்லை. இந்நிலையில் சாய் பல்லவி செய்த ஒரு காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கு மறுத்ததே பாராட்டுக்குக் காரணம்.
அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசியும் சாய் பல்லவி விளம்பரத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதற்கு முன்பே இரண்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசிய ஒரு ஃபேர்னஸ் கிரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்திருக்கிறார். நிறம் குறித்து சாய் பல்லவிக்கு இருக்கும் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணம்.
ஏற்கனவே ஒரு பேட்டியில் நிறம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக் கூடிய ஒன்று என்றும், நாம் வெள்ளையர்களிடம் போய் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள் என கேட்கப்போவதில்லை என்றும் ஏனெனில் அது அவர்களது நிறம் இது நம் இந்திய நிறம் என்று கூறியிருந்தார். அவரது இந்த நிலைப்பாட்டை பலரும் பாராட்டியிருந்த நிலையில் தற்போது கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரங்களில் அவர் நடிக்க மறுப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பிகில் மைக்கேலுக்கு 'வெறித்தனம்' பாடிய பூவையாருக்கு அடுத்து ஆதியால் அடித்த ஜாக்பாட்!