'பாகுபலி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நாயாகனாக நடித்துவரும் படம் 'சாஹோ'. சுஜித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக ஷராதா கபூர் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஷங்கர், இசான், லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
-
This Independence day, Say #Saaho with us ✊🏻
— UV Creations (@UV_Creations) May 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The action begins in cinemas from 15th Aug, 2019.#Prabhas @ShraddhaKapoor @sujeethsign @UV_Creations #SaahoSurprise #15AugWithSaaho pic.twitter.com/NDBzDN3ykU
">This Independence day, Say #Saaho with us ✊🏻
— UV Creations (@UV_Creations) May 21, 2019
The action begins in cinemas from 15th Aug, 2019.#Prabhas @ShraddhaKapoor @sujeethsign @UV_Creations #SaahoSurprise #15AugWithSaaho pic.twitter.com/NDBzDN3ykUThis Independence day, Say #Saaho with us ✊🏻
— UV Creations (@UV_Creations) May 21, 2019
The action begins in cinemas from 15th Aug, 2019.#Prabhas @ShraddhaKapoor @sujeethsign @UV_Creations #SaahoSurprise #15AugWithSaaho pic.twitter.com/NDBzDN3ykU
ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதிரடி ஆக்ஷனாக உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.