சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று மாலை எஸ்வி. சேகரின் 'அல்வா' நாடகம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போது நடைபெறுவதால் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் அரங்கில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. காவல் துறையினரும் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அரங்கில் நடைபெறவிருந்த 'அல்வா' நாடகத்தை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடப்பதாக தெரிவித்தார். மேலும், அல்வா என பெயரிட்டிருந்த அவரது நாடகத்தின் பெயரை 'காமெடி தர்பார்' என மாற்றியுள்ளார். இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, நாடகம் நடத்தும் இடத்தை மாற்றியதால் பெயரையும் மாற்றினேன்.
ஏன் என்று கேட்டபோது, நடிகர் சங்கத் தேர்தலே ஒரு 'காமெடி தர்பார்' போலத்தான் நடக்கிறது என கிண்டலாக விமர்சித்தார்.