சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் கரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த நான்கு வாரங்களில் 15-க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அதில், விஜய் ஆண்டனி நடித்த 'கோடியில் ஒருவன்' திரைப்படம் மட்டுமே நல்ல வசூலை ஈட்டியிருந்தது.
இப்போது வரையும் கணிசமான திரையரங்குகளில் இப்படம் ஓடிவருகிறது. முதல் நாள் மட்டுமே 1.80 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியானது ருத்ர தாண்டவம்.
இத்திரைப்படம் கோடியில் ஒருவன் முதல்நாள் வசூலை முறியடித்துள்ளது. முதல் நாளில் இப்படம் 2.70 கோடி வசூல் செய்து கரோனா காலத்தில் சாதனைப் படைத்துள்ளது.
ஒரு முன்னணி நடிகர் இல்லாமல் வெளியான படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதை திரைத்துரையே ஆச்சரியமாகப் பார்க்கிறது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது நாள்களில் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ருத்ர தாண்டவம்’ படத்தைப் புகழ்ந்த அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி