நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. ராஜமௌலி இயக்கும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
நட்பை மையமாக வைத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் ஆர்ஆர்ஆர் திரைப்பட விழா இன்று (நவம்பர் 26) நடைபெற்றது.
இதில் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. அப்போது இயக்குநர் ராஜமௌலி பேசுகையில், “ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும். அந்த எமோஷன்தான் படத்தின் உயிர்நாடி. திரைப்படத்தின் ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசைதான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல்” என்றார்.
இதையும் படிங்க: 'ஜெய் பீம்' படம் பார்த்து சூர்யாவை வாழ்த்திய நல்லகண்ணு!