'பாகுபலி', 'பாகுபலி 2' படங்களைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் திரைப்படம், 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம் ரணம் ரௌத்திரம்).
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு:
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படத்தை தனய்யா தயாரித்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்குள் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனையொட்டி படம் எதிர்பார்த்த தேதியில் வெளியாகாது என வதந்தி பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோவோடு, பட ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரமாண்டமாக வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அனல் பறக்கும் காட்சிகள் நிறைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 13ஆம் தேதி இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: #மீண்டும்நேசமணி- கமல் ஹாசனையும் விட்டு வைக்காத வடிவேலு ரசிகர்கள்