ETV Bharat / sitara

50 லட்சம் லைக்குகளை கடந்த ’ரௌடி பேபி’ பாடல்! - Rowdy baby 5M likes in YouTube

’ரௌடி பேபி’ பாடல், அதன் நடன அமைப்பு, இசைக்காகவே யூ டியூபில் பலராலும் ரசிக்கப்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக சாய் பல்லவியின் நடனத்திற்கு தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவில் ரசிகர்கள் உருவெடுத்துள்ளனர்.

Rowdy baby
Rowdy baby
author img

By

Published : Jul 9, 2021, 2:48 PM IST

Updated : Jul 9, 2021, 4:37 PM IST

நடிகர் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாரி 2'. பாலாஜி மோகன் இயக்கிய இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற 'ரௌடி பேபி' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. பிரபு தேவா நடன இயக்குநராக பணிபுரிந்த இந்தப் பாடலை நடிகர் தனுஷும், பாடகி தீயும் பாடியிருந்தனர்.

Rowdy baby

தொடர்ந்து யூ-டியூப் தளத்தில் வெளியான இப்பாடல், அதன் நடன அமைப்பு, இசைக்காகவே யூ டியூபில் பலராலும் ரசிக்கப்பட்டு, பல்வேறு சாதனைகளைப் படைக்கத் தொடங்கியது. குறிப்பாக சாய் பல்லவியின் நடனத்திற்கு தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவில் ரசிகர்கள் உருவெடுத்தனர். வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று அவர்களையும் இப்பாடல் ஆட்டம் போட வைத்தது.

Rowdy baby

2019ஆம் ஆண்டு இந்தியாவில் யூ டியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற ரெக்கார்டை ரௌடி பேபி பதிவு செய்தது. இதன் பின் பல மாஸ் ஹீரோக்களின் பாடல்கள் வெளியான பிறகும் ரெக்கார்டில் ’ரௌடி பேபி’ பாடல் முன்னணினியில் இருந்துவந்தது. தற்போது 118 கோடி பார்வையாளர்களை நெருங்கி வரும் இப்பாடல் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது இந்தப் பாடல் 50 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனை நடிகர் தனுஷ், சாய் பல்லவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’ பெட்ரோல மறந்து சைக்கிள் ஓட்டுங்க... ஆரோக்கியத்த காப்பாத்துங்க’ - சன்னி லியோன் ட்வீட்!

Last Updated : Jul 9, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.