'தரமணி' பட நடிகர் வசந்த் ரவி, ரவீனா, பாரதி ராஜா, சரண்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
’ராக்கி' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை, 'ரவுடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், 'ராக்கி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது 'ராக்கி' திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்; அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்தது நான்தான்’ - பிரபல நடிகர்