தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். சின்னதிரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு நுழைந்த இவர் காமெடி மட்டுமில்லாமல், சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் , வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் என இவர் தேடிச் சென்று உதவுவதில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார்.
இந்நிலையில் ரோபோ சங்கர், தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். அவரின் நகைச்சுவையைக் கேட்டு தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கினர்.
முதல்கட்ட முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறப்பு நாள்களில் சிறைச்சாலைகளுக்கு சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார். இவரின் இந்த முயற்சிக்கு சக நடிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ரோபோ சங்கர், சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹரி படத்தில் இணைந்த கங்கை அமரன்!