ETV Bharat / sitara

SAG 2019 - ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

அமெரிக்காவின் ஸ்கிரீன் ஆக்டர் கில்ட் விருது (SAG Award) வழங்கும் விழாவில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

Robert de niro
author img

By

Published : Nov 14, 2019, 7:47 PM IST

அமெரிக்காவின் முக்கியமான விருதுகளில் ஒன்று ஸ்கிரீன் ஆக்டர் கில்ட் விருது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழாவில், புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

’தி காட்ஃபாதர் 2’ படத்தில் விடா கார்லியோன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஒரு ஆஸ்கர் விருது, ’ரேஜிங் புல்’ படத்தில் ஜேக் லமோட்டோ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக ஒரு ஆஸ்கர் விருது என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ராபர்ட் டி நீரோ, இதுவரை 7 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் தோன்றிய நீரோவின் ‘ஐரிஷ்மேன்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Robert de niro
Robert de niro - The Irishman

நீண்டகாலமாக மக்களை மகிழ்விக்கும் இந்தக் கலைஞனின் திரைத்துறை பங்களிப்பை பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க முடிவு செய்திருக்கிறது SAG குழு. ஜனவரி 19ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆர்தர் ஃப்ளெக் ஜோக்கரான கதை" - மனம் திறந்த இயக்குநர் டோட் பிலிப்ஸ்!

Intro:Body:

Robert Denero spl 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.