ETV Bharat / sitara

விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற இருக்கும் ரித்திவிகா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் நடிகை ரித்திவிகா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

author img

By

Published : Feb 6, 2020, 8:59 PM IST

VijaySethupathi
VijaySethupathi

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை' மற்றும் 'பூலோகம்' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன் முறையாக விவேக் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார்.

இதனையடுத்து இப்படத்தில் நடிகை ரித்திவிகா தற்போது முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு இறுதி கட்டப் பணியை நோக்கி நகர்ந்திருப்பதால் விரைவில் டீஸர், படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கதையில் சர்வதேச அளவிலான பிரச்னை மையமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க: 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய அப்டேட்

Intro:Body:

Yathum Vurae Yavarum Kelir Movie Update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.